ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்.. முன்னால் காதலன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
ஷரோன் ராஜை காதலிப்பதற்கு முன்னரே இளைஞரை கிரீஷ்மா காதலித்து ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா
கேரளாவைச் சேர்ந்தவர் கிரீஷ்மா. இவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்தனர். இந்நிலையில் கிரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் ஷரோன் ராஜைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து ஷரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களைக் கலந்து ஆயுர்வேத பானமாகக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கிரீஷ்மாவை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஷரோன் ராஜை காதலிப்பதற்கு முன்னரே இளைஞ ரை கிரீஷ்மா காதலித்து ஏமாற்றியுள்ளார். இது குறித்து அந்த கூறுகையில், நான் கரீஷ்மாவை கோவிலில் சந்தித்தேன். அப்போது அவர் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று கூறினார்.
முன்னால் காதலன்
அதன் பிறகு இருவரும் பழகி காதலிக்க ஆரம்பிதோம். ஒரு நாள் ஐ.ஏ.எஸ். கோச்சிங்கிற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதாகக் கூறினார். அதனை நம்பி துடித்துப் போனேன். ஆனால் அது பொய் என்று தெரியவந்தது என்று கூறினார்.இதனால் அவருடன் ஏற்பட்ட காதலை முறித்து கொண்டேன்.
நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்று கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். கரீஷ்மாவின் கல்லூரி தோழிகள் அவரை வித்தியாசமானவர் என்று கூறுவார்கள். நான் அவர் ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவார் என்று நினைத்தேன். ஆனால், இப்படிச் செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று கூறினார்.