நாட்டை உலுக்கிய சம்பவம்; ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற கிரீஷ்மா - மரண தண்டனை அறிவிப்பு
காதலனை கொன்ற கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலன் கொலை
கேரளாவைச் சேர்ந்தவர் கிரீஷ்மா. இவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கிரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. எனவே, ஷரோன் ராஜை கொலை செய்ய முடிவு செய்து, அவருக்கு குளிர்பானத்தில் வலி நிவாரண மாத்திரை, தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால் அது பலனளிக்காத நிலையில், ஷரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானமாக கொடுத்துள்ளார். அதை குடித்த ஷரோன் துடிதுடித்து உயிரிழந்தார்.
பெண்ணுக்கு மரண தண்டனை
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்ட கிரீஷ்மா ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.

தொடர்ந்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கிரீஷ்மாவை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும், கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப் IBC Tamil