நடிகர் விஜய்யின் அரசியல் வருகை; அதற்கு தகுதியே இல்லை.. - கேபிஒய் பாலா பளீச் பதில்!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேபிஒய் பாலா கருத்து தெரிவித்துள்ளார்.
கேபிஒய் பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' மற்றும் 'குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் சமீப காலமாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.

சில கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறார். மேலும் மிக்ஜாம் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நிதியுதவியும் வழங்கினார்.பாலாவின் இந்த செயல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
எனக்கு தகுதி இல்லை
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலாவிடம், விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "நடிகர் விஜய் எதை செய்தாலும் யோசித்துதான் செய்வார்.

விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை. எனக்கு சேவை மட்டும் போதும்.
அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் செய்வதில் எந்த விதமான அரசியல் நோக்கம் கிடையாது, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். .         
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    