கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுகிறேனா? ஓப்பனாக பேசிய KPY பாலா
தேடி தேடி சென்று உதவிகள் செய்திடுவதில் தொடர்ந்து சின்னத்திரை கலைஞரும், நடிகருமான KPY பாலா தனித்து நிற்கிறார்.
KPY பாலா
சின்னத்திரை காமெடி கலைஞராக அறிமுகமாகி தற்போது பெரிய திரையிலும் நடித்து வரும் பிஸி நடிகராக KPY பாலா மாறியுள்ளார்.
பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையில் உதவிகளை செய்து வரும் நிலையில், இவரோ உதவி செய்திடுவதற்காகவே தனியாக சம்பாதித்து வருகிறார்.
ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்ததில் இருந்து வெள்ள மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுத்தது என பல உதவிகளை தனது சொந்த பணத்தின் மூலம் வழங்கி வருகின்றார் பாலா.
கருப்பு பணமா..?
தேனீ ஆண்டிப்பட்டியில் கல்லூரி ஒன்றின் ஆண்டு விழாவில் பங்கேற்று கொண்ட அவர், பின்னர் செய்தியாரல்களை சந்தித்தார். அப்போது, நம்மால் முடிந்தது சம்பாதித்தை நாம் கொடுகிறோம்.
பலரும் கூறுகிறார்கள் இந்த பையன் பின்னாடி யாரோ என்று, இருக்கிறார்கள் கஷ்டங்கள், வெட்கம் தான் இருக்கு. மேலும், லாரான்ஸ் மாஸ்டர் எனக்கு தோள்கொடுக்கிறார் என்று கூறினார்.
தொடர்ந்து தான் யாரோட கருப்பு பணத்தை இப்படி செல்வது செய்வதாக வரும் விமர்சனத்திற்கு, கருப்பு பணமெல்லாம் இல்லை. எல்லாமே வெயிலில் நின்னு கஷ்டப்பட்டு கருத்த பணம் தான் இது என கூறினார்.