அறிவுரைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் அழைப்பிற்கு கே.பி.முனுசாமி பதிலடி!!
ஓபிஎஸ் அழைப்பு
வெளியான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை.ஓபிஎஸ்'சும் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு அவரும் தோல்வியை சந்தித்தார்.தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
உரிமையில்லை
"தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். pic.twitter.com/zPtVopWIk0
— O Panneerselvam (@OfficeOfOPS) June 6, 2024
மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" என ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசும் போது, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்கள்.
கட்சி தொண்டர்களை அழைக்கவும், அதிமுகவை பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடே கூட்டணி அமைத்தவர் ஓபிஎஸ்.