வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி; இது மிகவும் ஆபத்து- தமிழகத்தில் வழக்குப்பதிவு!

BJP Narendra Modi Thoothukudi Lok Sabha Election 2024
By Swetha Apr 27, 2024 04:36 AM GMT
Report

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது கோவில்பட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வெறுப்புப் பிரச்சாரம்

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் காலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதற்கட்டம் 102 தொகுதிகளில் கடந்த 19ம் தேதி முடிந்தது.தற்போது 2ம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் நேற்று நிறைவடைந்தது.

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி; இது மிகவும் ஆபத்து- தமிழகத்தில் வழக்குப்பதிவு! | Kovilpatti Police Case Filed Against Narendra Modi

அதற்கான பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறியிருந்தார்.அது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதாவது அவர் தனது உரையில், காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெறும் 90 வினாடி பேச்சுக்கே காங்கிரஸ் இப்படி பயந்துருச்சு.. பிரதமர் மோடி

வெறும் 90 வினாடி பேச்சுக்கே காங்கிரஸ் இப்படி பயந்துருச்சு.. பிரதமர் மோடி

பிரதமர் வழக்குப்பதிவு

பிரதமரின் இந்த பேச்சு முஸ்லீம்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி; இது மிகவும் ஆபத்து- தமிழகத்தில் வழக்குப்பதிவு! | Kovilpatti Police Case Filed Against Narendra Modi

மேலும் அவரது இந்த உரை தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணியத்திடம் புகாரளித்தனர். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மத உணர்வை தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்  புகார் அளிக்கப்பட்டது. போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.