சப்ஸ்கிரைபர்களை ஏமாற்றி ரூ.41.88 லட்சம் மோசடி - பிரபல யூடியூப் தம்பதி கைது!
யூடியூப் சேனல் மூலம் சப்ஸ்கிரைபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த தம்பதியினரை கைது செய்துள்ளனர்.
யூடியூப் தம்பதி
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹேமா, இவரது கணவர் ரமேஷ்.
இவர்கள் இருவரும் சேர்ந்த யூடியூபில் மாடர்ன் மாமி என்ற பெயரில் சேனலை நடத்தி வந்திருக்கின்றனர்.

இதில் ஹேமா ஆடைகள், நகைகள், மேக்கப், அழகு சாதன பொருட்கள் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இவர்களின் சேனலுக்கு சுமார் 1.5 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதுவரை 595 வீடியோக்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மோசடி
இந்நிலையில், இவர்களது சேனலில் ரூ.200 கொடுத்தால் அது ரூ.300-ஆக திருப்பி தருவோம் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சப்ஸ்கிரைபர்கள் பலர் இவர்களின் வாங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர். பின்னர், அந்த தம்பதியினர் பணத்தை திருப்பி தரவில்லை.

இது குறித்து பன்னிமடை என்ற பகுதியை சேர்ந்த ரமா என்பவர் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
மேலும், இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் யூடியூப் தம்பதி 44 பேரிடம் இதுபோல் பணம் வசூலித்து ரூ.41.88 லட்சம் மோசடி செய்தது உறுதியானது.
மொத்தமாக ஒன்றரை கோடி வரை தம்பதி மோசடி செய்திருக்கலாம் என்று கூறினார். பின்னர் தலைமறைவான இந்த தம்பதியினரை பிடித்தனர், இவர்களுடன் சேர்ந்து கேமராமேனையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்களிடம், 45 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ஸ்கூட்டர், யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan