டீ காபி செலவுக்கு மட்டும் 27 லட்சமா? அதிரவைக்கும் கோவை தீவிபத்து செலவு
குப்பை கிடங்கு
மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகரின் ஒரு இடத்தில் வைக்கப்படுகின்றன. அவை குப்பை கிடங்கு எனப்படுகின்றன. அப்படி கோவை மாநகருக்கு இருக்கும் இடம் தான் வெள்ளலூர் குப்பை கிடங்கு.
இந்த இடத்தில் கடந்த உரம் தயாரிக்கும் போது, கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி கடும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ விபத்து தொடர்ந்து 11 நாட்கள் நீடித்துள்ளது. அதாவது 17-ஆம் தேதி வரை நீடித்துள்ளது.
27 லட்சமா..?
இதனை கட்டுக்குள் கொண்டுவர விமானப்படையில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தமாக 100'க்கும் மேற்பட்டவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளர்கள்.
உடன் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை மற்றும் மருத்துவகுழுவினரும் இருந்துள்ளார்கள். அதே போல பல JCP இயந்திரங்களும் பணியில் இருந்துள்ளது. இவ்வாறு ஓயாமல் வேலைபார்த்தவர்களுக்கு உணவு, டீ, குளிர்பானங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த தீயணைப்பு பணிக்காக செலவு கணக்குகள் குறித்து கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி வெளிவந்து பலரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது இப்பணிக்காக மொத்தமாக 76 லட்சத்தி 70ஆயிரத்தி 318 ரூபாய் செலவாகியுள்ளதாம். இதில், டீ, காபி சாப்பிட்டிற்கு மட்டுமே 27 லட்சத்தி 51 ஆயிரத்தி 678 ரூபாய் காலியாகிவிட்டதாம்.
மொத்த செலவின விவரம்.
11 நாள் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் - ரூ.27,51,678.
காலணிகள் - ரூ.52,348.
பெட்ரோல் - டீசல், ஆயில் - ரூ.18,29,731.
முகக்கவசம் - ரூ. 1,82,900.
போக்லேன், லாரி வாடகை - ரூ.23,48,661.
தண்ணீர் லாரி வாடகை - ரூ.5,05,000