30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் - மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த ரிஸ்க்!

Tamil nadu Coimbatore Biriyani
By Swetha Aug 29, 2024 04:10 AM GMT
Report

உணவகத்தில் அறிவிக்கப்பட்ட வினோத சலுகையால், பிரியாணி பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

6 பிரியாணி 

கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு சுவாரஸ்யமான பிரியாணி போட்டி நடைபெற்றது. அதாவது, ஆறு பிரியாணி சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் பரிசு என்றும்,

30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் - மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த ரிஸ்க்! | Kovai Hotel Announce Biriyani Compt For Rs 1 Lak

நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய் என்றும், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி பரவிய நிலையில், உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

என்னது.. பிரியாணியின் உண்மையான பெயர் பிரியாணி இல்லையா? சுவாரஸ்ய தகவல்!

என்னது.. பிரியாணியின் உண்மையான பெயர் பிரியாணி இல்லையா? சுவாரஸ்ய தகவல்!

தந்தை ரிஸ்க்

உணவகத்தின் உரிமையாளார் பாபி செம்மனூர் போட்டியை தொடங்கிவைத்தார். இதையடுத்து, பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு பிரியாணியை சாப்பிட்டனர். அதிக அளவில் பிரியாணியை சாப்பிட முடியாமல் பெரும்பாலானவர்கள் திணறினர்.

30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் - மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த ரிஸ்க்! | Kovai Hotel Announce Biriyani Compt For Rs 1 Lak

சிலர் சாப்பிட முடியாமல் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினர்.இதைனிடையே, சாலையோரம் அதிக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியது. ஒரு சிலர் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தியதால் அந்த உரிமையளர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

இந்த போட்டியில் கலந்துகொண்ட கணேச மூர்த்தி என்பவர், ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட, தன் மகனின் சிகிச்சைக்காக பணம் ஈட்டும் நோக்கத்தில் கலந்துகொண்டதாக கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.