அதை நம்பி வாழ்க்கையே போயிருச்சு; உங்க தங்கச்சி, அம்மாவை பார்த்து.. - ஓட்டுநர் ஷர்மிளா கண்ணீர்!

Coimbatore
By Sumathi Sep 23, 2023 03:16 AM GMT
Report

தற்போதைய தனது நிலை குறித்து ஓட்டுநர் ஷர்மிளா வேதனை தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் ஷர்மிளா

கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இதனால் ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.

அதை நம்பி வாழ்க்கையே போயிருச்சு; உங்க தங்கச்சி, அம்மாவை பார்த்து.. - ஓட்டுநர் ஷர்மிளா கண்ணீர்! | Kovai Driver Sharmila About Sadness Over Insult

இதையடுத்து ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து பிரபலமானதால் அரசியல்வாதிகளும் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்து வந்தனர்.

வேதனை 

அதன்படி, திமுக எம்.பி. கனிமொழி அவரது பேருந்தில் ஏற, டிக்கெட் குறித்து வாக்குவாதம் எழுந்து சர்ச்சைக்குள்ளானது. அதனை பார்த்த பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், ஷர்மிளாவை வேலையில் இருந்து தூக்கினார்.

அதை நம்பி வாழ்க்கையே போயிருச்சு; உங்க தங்கச்சி, அம்மாவை பார்த்து.. - ஓட்டுநர் ஷர்மிளா கண்ணீர்! | Kovai Driver Sharmila About Sadness Over Insult

மேலும், ஷர்மிளாவை வேலையில் சேர்க்க மற்ற பேருந்து ஓட்டுநர்களும் தயங்கினார்கள். அதன்பின், கமல்ஹாசன் அவரை அழைத்து 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை பரிசளித்தார். ஆனால் தற்போது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இதுகுறித்துஅவர் அளித்த பேட்டி ஒன்றில், "வாழ்க்கை அப்படியே தான் இருக்கு.

அந்த டைமில் எல்லாத்தையும் பாசிட்டவா பார்த்தேன். இப்போ முக்காவாசி எல்லாத்தையும் நெகட்டிவா பார்க்குறேன். நம்மளுக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை மாறப் போகுதுனு சந்தோஷப்பட்டேன். ஆனால் அது எல்லாம் இப்போ தலைகீழா மாறிடுச்சு. எந்த மக்கள் எனக்கு சப்போர்ட் பண்ணாங்களோ, அவங்களே என்னை கிண்டல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

முதல் பேருந்து டிரைவராக அசத்தும் இளம்பெண் - எதனால் ஆர்வம்?

முதல் பேருந்து டிரைவராக அசத்தும் இளம்பெண் - எதனால் ஆர்வம்?

நான் தப்பு செஞ்சிருந்தா நீங்க சொல்லலாம். ஆனால் எதுவுமே பண்ணாம, என்னை கீழே போட்டு மிதிக்கிறீங்க. இப்போ நான் வெளியில சிரிச்சுட்டு இதை சொல்றேன். உள்ளே அழுதுட்டு தான் இருக்கேன். மீடியாவை நம்பி என் வாழ்க்கையே போயிருச்சு என வேதனை தெரிவித்துள்ளார்.