என்னை கீழே போட்டு மிதிக்குறாங்க; தலைகீழா மாறிடுச்சு - ஓட்டுநர் ஷர்மிளா வேதனை!
தனது நிலை குறித்து ஷர்மிளா தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது.
ஓட்டுநர் ஷர்மிளா
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து பிரபலமானதால் அரசியல்வாதிகளும் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்து வந்தனர். அதன்படி, திமுக எம்.பி. கனிமொழி அவரது பேருந்தில் ஏற, டிக்கெட் குறித்து வாக்குவாதம் எழுந்து சர்ச்சைக்குள்ளானது.
வேதனை
அதனை பார்த்த பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், ஷர்மிளாவை வேலையில் இருந்து தூக்கினார். தற்போது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில்,
நம்மளுக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை மாறப் போகுதுனு சந்தோஷப்பட்டேன். ஆனால் அது எல்லாம் இப்போ தலைகீழா மாறிடுச்சு. எந்த மக்கள் எனக்கு சப்போர்ட் பண்ணாங்களோ, அவங்களே என்னை கிண்டல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நான் தப்பு செஞ்சிருந்தா நீங்க சொல்லலாம். ஆனால் எதுவுமே பண்ணாம, என்னை கீழே போட்டு மிதிக்கிறீங்க.
இப்போ நான் வெளியில சிரிச்சுட்டு இதை சொல்றேன். உள்ளே அழுதுட்டு தான் இருக்கேன். மீடியாவை நம்பி என் வாழ்க்கையே போயிருச்சு எனத் தெரிவித்துள்ளார்.