பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை டிஸ்மிஸ் செய்தது ஏன் ? - விளக்கம் கொடுத்த நிர்வாகம்

By Irumporai Jun 23, 2023 09:07 AM GMT
Report

கோவை முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  பெண் ஓட்டுநர் பணி நீக்கம்

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த ஷர்மிளா இன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலை திமுக எம்பி கனிமொழி, பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை பார்ப்பதற்காக பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.குறித்து ஓட்டுநர் ஷர்மிளா செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று காலையில் திமுக எம்பி கனிமொழி தன்னை பார்க்க பேருந்தில் பயணித்ததாகவும், அப்போது பெண் நடத்துனர் டிக்கெட் கேட்கையில், கனிமொழி எம்பி உடன் வந்தவர்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

இது குறித்து புகார் அளிக்க தனது தந்தையுடன் பேருந்து உரிமையாளரை அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது, முதலில் கனிவாக பேசிய உரிமையாளர். பின்னர் , நீ பிரபலமாகிவிட்டதால் உன்னை பார்க்க ஆட்கள் வருவது உன் தப்பு என்றது போல பேசியதாகவும், தான் கனிமொழி எம்பி வருவதை முன்னரே கூறவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால், தான், மேனேஜரிடம் கனிமொழி எம்பி வருவதை முன்னேரே தெரிவித்தேன் என்றும் ஆனால் மேனஜர் தான் கூறவே இல்லை என்று தெரிவித்ததாக ஷர்மிளா தெரிவித்தார்.

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை டிஸ்மிஸ் செய்தது ஏன் ? - விளக்கம் கொடுத்த நிர்வாகம் | Sharmila Coimbatores First Woman Driver

உரிமையாளர் விளக்கம்

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, நான் என்ன பைத்தியக்காரியா என அப்போது தான் கோபத்தில் பேசிவிட்டதாக தெரிவித்தார். இதில் வாக்குவாதம் முற்றி அப்படியென்றால் உன் மகளை கூட்டிக்கொண்டு செல் என உரிமையாளர் தெரிவித்ததால், தானும் , தனது தந்தையும் அங்கிருந்து வந்துவிட்டோம் என ஷர்மிளா தெரிவித்தார்.

இது குறித்து பேருந்து உரிமையாளர் கூறுகையில் கனிமொழி வருவதை முன் கூட்டியே கூறவில்லை , ஆகவே நான் வாக்குவாதம் வந்த போது சத்தாமல் போடமால் போங்கள் என்றுதான் கூறினேன் என அவர் பேருந்து உரிமையாளர் கூறியுள்ளார், இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.