விமானத்தில் குழந்தைக்காக தாய் செய்த செயல் - மிரண்ட பயணிகள்

South Korea Flight
By Sumathi Nov 19, 2025 09:57 AM GMT
Report

தாய், 4 மாத குழந்தைக்காக விமானத்தில் செய்த செயல் வைரலாகி வருகிறது.

love bags

தென்கொரியாவைச் சேர்ந்த இளம் தாய், 4 மாத குழந்தையுடன் சியோலில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானத்தில் பயணத்துள்ளார்.

flight

அப்போது அவரது 10 மணி நேர நீண்ட விமானப் பயணத்தின் போது குழந்தை அழலாம் என முன்கூட்டியே எண்ணி, சக பயணிகளை சங்கடப்படுத்தாமல் இருக்க ஒரு அசத்தலான யோசனையை திட்டிமிட்டுள்ளார்.

அதன்படி, விமானத்தில் இருந்த சுமார் 200 பயணிகளுக்கும் அந்த தாய் தனிப்பட்ட முறையில் சிறிய பிளாஸ்டிக் பை ஒன்றை கொடுத்தார். ஒவ்வொரு பையிலும் மிட்டாய்கள், சூயிங் கம் மற்றும் காது செருகிகள் (earplugs) போன்றவை இருந்தன.

தாய்லாந்தை தனியா சுத்தி பாக்கணுமா - இதோ அற்புதமான வாய்ப்பு!

தாய்லாந்தை தனியா சுத்தி பாக்கணுமா - இதோ அற்புதமான வாய்ப்பு!

வைரல் சம்பவம்

அதோடு, பையில் ஒரு இனிய குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது. அது அந்தக் குழந்தையின் சார்பாக எழுதப்பட்டிருந்தது. அதில், “வணக்கம், நான் ஜான் வூ. நான் 4 மாத குழந்தை. இன்று என் அம்மா மற்றும் பாட்டியுடன் என் அத்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அமெரிக்கா செல்கிறேன்.

விமானத்தில் குழந்தைக்காக தாய் செய்த செயல் - மிரண்ட பயணிகள் | Korean Mother Love Bags 200 Passengers On Flight

இது எனது முதல் விமானப் பயணம், எனக்கு கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. நான் அழுவது அல்லது தொந்தரவு செய்வது இயல்பு. நான் அமைதியாக இருக்க முயற்சிப்பேன், ஆனால் என்னால் உறுதியளிக்க முடியாது.

என் குரல் அதிகமாக இருந்தால் இதைப் பயன்படுத்துங்கள் (காது செருகிகளை சுட்டிக்காட்டி). நல்ல பயணம் அமையட்டும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.