கொரிய பெண்களின் பளபள முகம்; முடியும் அப்படி இருக்கனுமா? இந்த 3 விஷயம் போதும்!

Hair Growth
By Sumathi Sep 05, 2024 06:00 PM GMT
Report

கொரிய பெண்களின் தலைமுடி ரகசியம் குறித்துப் பார்க்கலாம்.

தலைமுடி

கொரிய பெண்கள் வலுவான, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியைக் கொண்டுள்ளனர். அதில் பலருக்கும் விருப்பம் உண்டு. அவர்களின் பராமரிப்புக் குறிப்புகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

கொரிய பெண்களின் பளபள முகம்; முடியும் அப்படி இருக்கனுமா? இந்த 3 விஷயம் போதும்! | Korean Hair Care Tips For Faster Hair Growth Tamil

உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும். இதனால் தலைமுடியின் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முடி அடர்த்தியாகவும், வலிமையானதாகவும் இருக்கும்.

தலைமுடியின் வலிமை, வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துக்கு புளிக்க வைத்த அரிசி நீரைப் பயன்படுத்த வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டு அலசிய மறுநாள் புளித்த அரிசி நீரை தலையின் அடி முதல் நுனி வரை தடவி விட்டு 20 நிமிடங்களுக்குப் பின் வெறும் தண்ணீரில் தலை முடியை அலசவும்.

korean hair care

தலைமுடி பராமரிப்புக்கு கிரீன் டீயில் முடியை அலசுவது முக்கியம். தலைமுடியின் நுண்ணறை வளர்ச்சியைத் தூண்டுவதிலும், முடி உடைவதைத் தடுப்பதிலும் கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆறிய கிரீன் டீயை முடிக்கு ஷாம்பு செய்த பின்னர் உங்கள் தலைமுடியில் பயன்படுத்தவும். இது உச்சந்தலை வறட்சி, பொடுகைக் குறைக்க முடியும்.  

அரிசி தண்ணீரை முகத்தில் இப்படி தான் யூஸ் பண்ணனும் - ட்ரெண்டாகும் கொரியர்களின் ரகசியம்!

அரிசி தண்ணீரை முகத்தில் இப்படி தான் யூஸ் பண்ணனும் - ட்ரெண்டாகும் கொரியர்களின் ரகசியம்!