இட்லி, தோசை-ன்னு செஞ்சு போரடிக்குதா? இந்த உப்பு மிளகு ரொட்டியை ட்ரை பண்ணி பாருங்க..

Healthy Food Recipes
By Sumathi Jan 13, 2025 01:30 PM GMT
Sumathi

Sumathi

in உணவு
Report

கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டி எப்படி செய்யலாம்?

உப்பு ரொட்டி

காலை, இரவு என எப்பவும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? அப்போ கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டி ட்ரை பண்ணலாம்.

milagu uppu rotti

இந்த ரொட்டியை காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். உப்பு ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம். 

சாப்பாட்டில் அதிக காரம் சேர்க்குறீங்களா? இதய நிபுணர்கள் எச்சரிக்கை!

சாப்பாட்டில் அதிக காரம் சேர்க்குறீங்களா? இதய நிபுணர்கள் எச்சரிக்கை!

 தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/4 கப்
  • வரமிளகாய் - 2
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 5
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை எடுத்து நீரில் 2-3 முறை அலசி விட்டு, பின் நீரை ஊற்றி மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

1 மணிநேரம் கழித்து, ஊற வைத்த அரிசி பருப்பை நன்கு கழுவி, பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், வரமிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு தூவி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து,

அதை ஓரளவு மெல்லியதாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான உப்பு ரொட்டி தயார். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி அசத்தலான சைடு டிஷ்.