சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து - மக்கள் பதற்றம்!
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீ பற்றிபதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் விமான நிலையத்தின் 3C புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், அங்கு தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஊடகங்களில் வெளியான விபத்தின் புகைப்படங்களில் செக் இன் பகுதியில் தீ பற்றிய காட்சி இருக்கும்.
மத்திய மந்திரி
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா கூறுகையில், "டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.