தண்ணீருக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்; அதுவும் இந்தியாவில் - எங்கு தெரியுமா?
நீருக்கடியில் ஒரு ரயில் செல்வது குறித்து் தெரியுமா?
நீருக்கடியில் மெட்ரோ
கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றின் நீருக்கடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் செல்கிறது. இந்த சுரங்கப்பாதை ஹூக்ளி ஆற்றின்
கிழக்குக் கரையில் உள்ள எஸ்பிளனேடையும் மேற்குக் கரையில் உள்ள ஹவுரா மைதானத்தையும் இணைக்கிறது. இது தரை மட்டத்திலிருந்து தோராயமாக 33 மீட்டர் கீழே உள்ளது. 11 மாடி கட்டிடத்திற்கு சமம்.
எங்கு தெரியுமா?
இதில் ஆற்றின் அடியில் அரை கிலோமீட்டர் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கடக்க தோராயமாக ஒரு நிமிடம். இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அது மண்ணை வெட்டிச் செல்லும் அதே வேளையில் சுற்றியுள்ள பகுதியையும் மூடுகிறது.
ஆகவே தோண்டும் போது தண்ணீர் நுழைந்தாலும், ஏற்கனவே முடிக்கப்பட்ட சுரங்கப்பாதை சேதமடையாது. முதல் முறையாக, இணைப்புகளில் ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி மெட்ரோவின் வெற்றியைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டு, நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2025-ம் ஆண்டு நிறைவடைந்தது.