நாட்டை உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு - டிஎன்ஏ சோதனையில் வெளியான முக்கிய விவரம்!

Attempted Murder Sexual harassment West Bengal Crime
By Sumathi Sep 07, 2024 06:19 AM GMT
Report

 கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் மரபணு சோதனை விவரம் வெளியாகியுள்ளது.

 மருத்துவர் கொலை

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

sanjay roy

மேலும், செமினார் ஹாலுக்குள் நுழைந்தபோது அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்தார். சம்பவத்தன்று அந்த அறைக்குள் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் - நாட்டை உலுக்கிய கொடூரம்!

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் - நாட்டை உலுக்கிய கொடூரம்!


 மரபணு சோதனை

இதனால் பீதியுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டேன். இதில்தான் புளூடூத் ஹெட்செட் விழுந்து இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டை உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு - டிஎன்ஏ சோதனையில் வெளியான முக்கிய விவரம்! | Kolkata Doctor Case Dna Test Result

மேலும், இந்த குற்றத்தில், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும். பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.