மூதாட்டி, சிறுவனை கொடூரமாக தாக்கிய போலீசார் - பயங்கர சம்பவம்!

Viral Video Crime Madhya Pradesh
By Sumathi Aug 31, 2024 10:15 AM GMT
Report

போலீசார் மூதாட்டி மற்றும் சிறுவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை கைதிகள்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் தீப்ராஜ்(15). பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த சிறுவனையும் அவரது பாட்டியையும் போலீஸார் விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.

madhya pradesh

தொடர்ந்து கட்னி காவல் நிலையத்தில் அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!

அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி சந்தோஷ் டெஹாரியா தலைமையில் விசாரணை நடைபெறுவதாக கத்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து பேசியுள்ள எஸ்.பி. சிமாலா பிரசாத், அந்த வீடியோவில் இருக்கும் மூதாட்டி மற்றும் சிறுவன் மீதும் காத்னி காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.