கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை? சிபிஐ குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்!
பெண் பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
பயிற்சி மருத்துவர் கொலை
மேற்குவங்கம், கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதற்கிடையில் அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடந்தன. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ வாசம் ஒப்படைத்தது.
சிபிஐ குற்றப்பத்திரிகை
இந்நிலையில், 58 நாள்களுக்கு பின் சிபிஐ சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், கூட்டு பாலியல் வன்கொடுமை என்று இல்லை. சஞ்சய் ராய் மட்டுமே தனியாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
குற்றம் நடந்த அந்த சமயத்தில் அவர் போதையில் இருந்துள்ளார். சஞ்சய் ராய் செமினார் ஹாலில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெளியே வருவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
பெண் மருத்துவர் உடலின் வெளிபுறத்தில் 16 காயங்களும், உள்புறத்தில் 9 காயங்களும் இருந்திருக்கிறது. மேலும், அவர் நகத்தில் இருந்த ரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அது சஞ்சய் ராய்யின் டி.என்.ஏ.வுடன் ஒத்துபோவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.