மக்களே உஷார்.. இந்த மீனை மட்டும் இப்படி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி - மருத்துவர்கள் தாவல்!
மீன் உணவு ஒன்றை இவ்வாறு சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆபத்தான மீன்
தாய்லாந்தில் பெரும்பாலானோர் பாரம்பரியமான Koi pla என்ற மீன் உணவை சாப்பிட்டு வந்தனர். அதன் காரணமாக அவர்களில் பலர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்த மீன் வகை அந்த பகுதியில் மிக மலிவாக கிடைக்கக்கூடியவை, மிகவும் சுவையானது அதனால் மக்கள் இதனை சாப்பிட்டு வந்தனர்.
தாய்லாந்து மக்களில் சுமார் 20000 பேர் ஆண்டு தோறும் இந்த பச்சை மீனை சாப்பிட்டு கல்லீரல் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள். அங்கு நரோங் குண்டிகியோ என்ற மாணவி, மெடிக்கல் காலேஜ்க்கு படிக்க சென்ற பின்னர் அவர்கள் சாப்பிட்ட மதிய உணவு தான் தனது பெற்றோர் இருவரின் உயிரையும் பறித்த கல்லீரல் புற்றுநோய்க்கான காரணம் என்பதை அறிந்தார்.
புற்றுநோய்
இந்நிலையில், இந்த மீனை சாப்பிட்டால் புற்றுநோய் வர காரணம் என்ன என்று ஆராயும்போது தான் தெரியவந்தது. அந்த மீனை பச்சையாக உட்கொள்ளும்போது இதில் இருக்கும் ஃப்ளூக் எனப்படும் தட்டைப்புழுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். இது பல நன்னீர் மீன்களில் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு, கோய் ப்லா உணவை ஒருமுறை சாப்பிட்டால், புழுக்கள் பல ஆண்டுகளாக பித்த நாளங்களில் கண்டறியப்படாமல் பெரிய வீக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
டாக்டர் நரோங் கூறுகையில், "கண்டிப்பாக மக்களிடம் எப்படியாவது கோய் ப்லா உணவு பழக்கத்தை கைவிட வைக்க வேண்டும்" என்று கூறி வருகிறார். இவரை போல் பல மருத்துவர்கள் விஞ்ஞானிகள், தாய்லாந்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.