விராட் கோலி விளையாட மாட்டார்? என்னாச்சு - அதிர்ச்சியில் இந்திய அணி!
2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
2வது டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்டிச. 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி Prime Minister's XI அணியுடன் பயிற்சி ஆட்டத்திலும் அசத்தி வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்திய அணிக்குள் வருவதால் தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.
விராட் கோலி
அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் விராட் கோலி பயிற்சிக்கு வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அதில் அவரது கால் முட்டியில் பேண்டேஜ் ஒட்டுப்பட்டுள்ளதை காண முடிந்தது.
எனவே, இந்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அடிலெய்டில் கோலி இதுவரை 3 டெஸ்ட் சதங்கள், 2 ஓடிஐ சதங்களை விளாசியுள்ளார். இன்னும் 102 ரன்களை அடித்தால், இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அல்லாத பேட்டர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.