இடுப்பில் கடும் காயம் - அரையிறுதியில் களமிறங்குவாரா விராட் கோலி!

Virat Kohli Cricket Indian Cricket Team T20 World Cup 2022
By Sumathi Nov 09, 2022 07:36 AM GMT
Report

காயம் காரணமாக விராட் கோலியின் நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ல நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் விராட் கோலி பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தபோது ஹர்ஷல் படேல் வீசிய வேகமான பந்து பட்டு கோலியின் இருப்பில் காயமானது.

இடுப்பில் கடும் காயம் - அரையிறுதியில் களமிறங்குவாரா விராட் கோலி! | Kohli Gets Hit During Net Session T20

இதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். விராட் கோலியின் ஆட்டத்தின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. கோலியின் இந்தக் காயம் பெரும் பின்னடைவு என ரசிகர்கள் கவலை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

களமிறங்குவாரா?

இந்நிலையில், கோலிக்கு பெரிய அடிகள் எதுவும் இல்லை. அவர் நலமாக உள்ளார். கண்டிப்பாக செமி ஃபைனலில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன் எடுத்தவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.