இந்திய பவுலர்களை வம்பிழுத்த கோலியின் சகோதரர் - பதிவால் வெடித்த சர்ச்சை!
கோலியின் சகோதரர் விகாஸ் கோலி பதிவால் சர்ச்சை வெடித்துள்ளது.
IND vs ENG
ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது.
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 311 ரன்கள் என்ற இமாலய முன்னிலையை பெற்றது. பும்ரா, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார்.
விகாஸ் பதிவு
முகமது சிராஜ் 140 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 143 ரன்களையும் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சமீப காலம் வரை நம்மிடம் ஒரு டெஸ்ட் அணி இருந்தது.
அதில் நமது பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவார்கள்" என்று பதிவிட்டிருந்தார். கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தாலும், விகாஸ் கோலியின் இந்தப் பதிவு விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.