கொடநாடு வழக்கில் பெரும் திருப்பம்!! அதிரடி காட்டிய நீதிமன்றம்
கொடநாடு வழக்கில் இன்று உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் 2017-ஆம் ஆண்டு கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தது.
பாதுகாப்புகள் இருந்த நிலையிலும் கனகராஜ் தலைமையிலான கும்பல் இந்த கொலை கொள்ளை சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றது.
நீதிபதி அதிரடி
இன்று உதகை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஷாஜகான் கனகராஜ் மற்றும் சிபிசிஐடி போலிசார் வழக்கின் முக்கிய குற்றவாளியான வாளையார் மனோஜ் ஆஜராகினர்.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கனகராஜின் உயிரிழப்பு, தொலைத்தொடர்ப்பு சம்மந்தப்பட்ட எலக்ட்ரானிக் ஆதாரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்மந்தப்பட்ட டவர்கள் குறித்து குஜராத் மாநிலத்திற்கு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் இது வரை வழக்கில் மேற்க்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். அப்போது நீதிபதி குஜராத்தில் ஆய்வு என்று எத்தனை நாள் கூறிவீர்கள் என கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணை நவம்பர் 24-ஆம் தேதி ஒத்திவைத்தார்.