பிரிட்ஜ் -யில் எட்டி பார்த்த மனித மண்டை ஓடு.. 20 ஆண்டுகளில் நடந்த கொடூரம் - பகீர் பின்னணி!
பழைய வீட்டிலிருந்து மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் கொச்சியை அடித்த சோட்டானிக்கரை ஏறிவேறி பகுதியில் சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் ஜான் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்று இருந்துள்ளது.
இந்த வீடு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அந்த வீடு பாழடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது சமூக விரோதிகளின் இடமாக மாறியுள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேரள காவல் துறையினர் பாழடைந்த வீட்டில் சோதனை நடத்தி போது திகிலில் உரைந்தனர்.சுமார் 20 ஆண்டுகளாக பூட்டப்பட்ட பாழடைந்த வீட்டில் உள்ள அனைத்து இடங்களும் குப்பைகளாகவும், அழுக்காகவும் காணப்பட்டது.அங்கு இருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தனர்.
நடந்த கொடூரம்
அதில் மனித மண்டை ஓடுகள் பல இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாழடைந்த வீட்டில் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்த போது மண்டை ஓடு மட்டுமின்றி மனித முதுகெலும்பு , மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு பல பெண்களின்' மண்டை ஓடு மற்றும் எலும்புகள் என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.