அண்ணியுடன் மலர்ந்த காதல்.. திருமணம் செய்ய அடம்பிடித்த இளம்பெண்- பகீர் சம்பவம்.!
கணவரின் சகோதரி அண்ணியைக் காதலித்து திருமணம் செய்த செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம்
உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பெஹாடா முஜாவர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார்.
அந்த இளம் பெண் கணவரின் சகோதரி என்ற உறவு முறையாகும்.இதனையடுத்து இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களது பழக்கம் நாளடைவில் ஒரேபாலின ஈர்ப்பு காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையிலிருந்துள்ளனர்.
இந்த விவகாரம் இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், அதிர்ச்சியடைந்தனர்.மேலும் இந்த செயலுக்குப் பெண்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
காதல்
இதனை அறிந்த குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, இளம்பெண், அண்ணியுடன் தான் வாழுவேன் என அடம்பிடித்துள்ளார்.இதனால் திருமணமான பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்த னர்.
இளம்பெண்ணுக்கு விஷம் கொடுத்த கொலை செய்ய முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.