6 வயது சிறுமி மாரடைப்பு மரணம்;ஒரே ஒரு பிள்ளைதான் என்று கதறிய பெற்றோர் - பள்ளியில் நடந்தது என்ன?
6 வயது சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பள்ளியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பதனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கராஜு-ஸ்ருதி தம்பதியினர் . இவர்களுக்கு தேஜஸ்வனி என்ற ஒரு மகள் உள்ளார்.இவருக்கு வயது 6 .தேஜஸ்வனி அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென மயங்கி வகுப்பறையில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சிறுமி தேஜஸ்வனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்குச் சிறுமியைப் பரிசோதித்த போது மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர்.இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.உடனடியாக விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
6 வயது சிறுமி
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோனை அறிக்கை வந்த பின்னனே சிறுமி உயிரிழந்த காரணம் குறித்துத் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இளம் வயது மாரடைப்புகள் என்பது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.