நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருநெல்வேலி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 38-வது தொகுதி திருநெல்வேலி
திருநெல்வேலி
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு திருநெல்வேலி மக்களவை தொகுதியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விளாத்திகுளம், சிறீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி போன்ற சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைப்பிற்கு பிறகு, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குனேரி மற்றும் இராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை சந்தித்து வரும் திருநெல்வேலி மக்களவை தொகுதியில், அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியியன் கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1952 பெ. தி. தாணு பிள்ளை (காங்கிரஸ்)
1957 பெ. தி. தாணு பிள்ளை (காங்கிரஸ்)
1962 முத்தையா (காங்கிரஸ்)
1967 சு. சேவியர் (சுதந்திராக் கட்சி)
1971 சு. ஆ. முருகானந்தம் (சிபிஐ)
1977 ஆலடி அருணா (அதிமுக)
1980 த. ச. அ. சிவபிரகாசம் (திமுக)
1984 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அதிமுக)
1989 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அதிமுக)
1991 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அதிமுக)
1996 த. ச. அ. சிவபிரகாசம் (திமுக)
1998 கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அதிமுக)
1999 பி. எச். பாண்டியன் (அதிமுக)
2004 ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரஸ்)
2009 எஸ். எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்)
2014 கே. ஆர். பி. பிரபாகரன் (அதிமுக)
2019 எஸ். ஞானதிரவியம் (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி, திருநெல்வேலி மாவட்டத்தில்,
ஆண் வாக்காளர்கள் - 6,75,811 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,06,878 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 129 பேர் என மொத்தமாக 13,82,818 வாக்காளர்கள் உள்ளனர்.