வாக்குசாவடியில் கூட்டம் உள்ளதா? தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய புதிய வசதி
வாக்களிப்பது வாக்காளர்களின் ஜனநாயக கடமை அல்ல உரிமை
வாக்கெடுப்பு
மக்களவை தேர்தல் வாக்கெடுப்பு இன்று துவங்கியுள்ளது. நாட்டில் அடுத்த 5 ஆண்டுகள் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ஆளும் அரசை தேர்வு செய்யும் இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை 40 தொகுதிகளை சேர்ந்து நாட்டில் மொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காலை முதலே மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திரங்கள் என பலரும் தங்களது வாக்கை செலுத்தி வருகிறார்கள். வாக்களிக்க வருபவர்களுக்கு, அதிகப்படியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
கூட்டம் எப்படி உள்ளது..?
பதற்றமான இடங்களில் பலமான போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு செல்வதற்கு முன்பு எவ்வளவு கூட்டம் உள்ளது என்பத தெரிந்து கொள்ள புதிய வசதியையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது