திருச்சி சிவா என் தம்பி - முதலமைச்சரால் அந்தர் பல்டி அடித்த நேரு!
திருச்சி சிவா என் தம்பி, நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாக நேரு தெரிவித்துள்ளார்.
உட்கட்சி பூசல்
அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் ஏன் திருச்சி சிவா பெயரைப் போடவில்லையென திருச்சி சிவா ஆதரவாளர்கள், கே.என்.நேருவுக்கு கருப்புக் கொட்டி காட்டினர். அதைத் தொடர்ந்து, கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டினுள் புகுந்து அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் திருச்சி சிவாவின் வீட்டிற்கே அமைச்சர் கே.என்.நேரு சென்று, நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 'நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக்காத்து வருகிறவர்கள், உங்களுக்குள் இப்படி எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது' என்றார்.
நேரில் சந்திப்பு
அப்போது 'எங்களுக்குள்ள எந்த பிரச்னையுமே இல்லைங்கண்ணே. அவர் எங்க ஊர்க்காரரு'ன்னு நான் சொன்னேன். உடனே முதலமைச்சர் அவர்கள் 'நீ நேரா போய்ப் பார்த்து அவரை சரி பண்ணிட்டு சமாதானப்படுத்திட்டு வா. உங்களுக்குள்ள எந்தவிதமான பிரச்னையும் இல்லைங்கிறதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என்றார்.
நான் வந்து சிவாவிடம் பேசினேன். என்னை விட அவர் 2 வயது சிறியவர். தம்பி என்று தான் கூப்பிடுவேன். 'நீங்க ஒன்னும் நினைக்காதீங்க. எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன். முதலமைச்சர் கேட்டபோது கூட, அந்த வேலையை எல்லாம் நான் செய்வனாங்க என்று சொன்னேன்'.
விளக்கம்
முதல்வரோ 'சிவா தி.மு.க.,வில் ஒரு மூத்த தலைவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டால் அது கழகத்திற்கு நல்லதா!' என்று கேட்டார். 'எனக்கு ஒன்னும் இல்லைங்க. நான் போய் அவரை சரியா 6 மணிக்கு பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்'னு சொன்னேன்.
சிவாவை வந்து பார்த்து மனசு விட்டு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அவரும் சொல்லியிருக்கிறார். இனி இதுமாதிரி எதுவும் நடக்கக்கூடாது, நடக்காது" எனத் தெரிவித்தார்.