திருச்சியில் பெண் போலீஸ் மீது அமைச்சர் நேரு மற்றும் சிவா ஆதரவாளர்கள் தாக்குதல் - கலவரமான காவல்நிலையம்
காவல் நிலையத்தில் திமுக அமைச்சர் நேரு, திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்களிடையே மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவா வீடு மீது கல் வீசி தாக்குதல்
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்ற காவல் நிலையத்தில் அமைச்சர் நேரு, திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்களிடையே மோதலில் ஈடுபட்டனர்.
திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடந்தது . இந்த தாக்குதலுக்கு காரணம் அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் தான்காரணம் என்று காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நீதிமன்ற காவல் நிலையத்தில் அமைச்சர் நேரு, திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்களிடையே மோதலில் ஈடுபட்டனர்.
பெண் காவலருக்கு எலும்பு முறிவு
நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது நாற்காலியை எடுத்து வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டிய சிவா ஆதரவாளர்கள் கைது செய்து காவல்நிலையத்தில் இருந்த நிலையில் அவர்கள் மீது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் காவல் நிலையத்தில் நடந்த மோதலை தடுக்க வந்த சாந்தி என்ற பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.