ஒருபுறம் சீமான்; மறுபுறம் விஜய் - கூட்டணி குறித்து பேசிய அமைச்சர் நேரு
சட்டமன்ற தேர்தலில் சுமூகமான கூட்டணி அமையும் சூழல் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
கே.என்.நேரு
திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்.
இதில் கே.என்.நேரு பேசியதாவது, சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை, நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என தொடர் வெற்றியை திமுக பெற்றதற்கு முக்கிய காரணம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் கடுமையான உழைப்புதான்.
2026 தேர்தல்
ஒருபக்கம் சீமான் நம்மை குறை சொல்கிறார். ஒருபக்கம் புதுசா வந்தவர், வரப்போகிறவர் குறை சொல்கிறார். ஒருபக்கம் அ.தி.மு.க, அடுத்து நாங்கதான் என்று சொல்கிறார்கள். எவ்வளவோ நன்மைகள் செய்தாலும், பா.ம.க நம்மை குறை சொல்கிறார்கள். பா.ஜ.க ஏற்கனவே எதிரியாக உள்ளது.
எதிரிகள் அதிகமான காலம் இது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது போல் சுமூகமான கூட்டணி அமையும் சூழல் இல்லை என்பது தான் எங்களுடைய கருத்து. அதிமுக பொறுத்த வரையில், யார் தலைவர் என்றே தெரியவில்லை, அதிமுகவில் பெரிய குழப்பம் நீடிக்கிறது. தளபதி ஸ்டாலினை 2வது முறையாக முதல்வராக்க அனைவரும் உழைக்க வேண்டும்" என பேசினார்.