ரூ.4,000 கோடியல்ல மொத்தம் ரூ.5,166-க்கு பணிகள் - ஆனால்...!!அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
சென்னை மழைநீர் வடிகாலுக்காக இது வரை வெறும் 2,191 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சென்னை
சென்னை மழை வெள்ளத்தால் கடுமையாக சூழப்பட்டு பெரும் இன்னலை மக்களுக்கு அளித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. இதனையடுத்து, பலரும் அரசு மழை நீர் வடிகாலுக்காக செலவு செய்த ரூ.4000 கோடி குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றுக்கான அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து பேட்டியளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி என்று கூறி, ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன என்று கூறினார்.
மீதமுள்ள 3,000 ரூபாய் கோடிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பலரும் ரூ.4000 கோடி ரூபாய்க்கு நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அமைச்சர் கே.என்.நேருவின் விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.