பண்ணை வீட்டில் கோலாகல கல்யாண சடங்கு - பாலிவுட் நடிகையை கரம்பிடிக்கும் கே.எல்.ராகுல்!
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியைத் திருமணம் செய்யவுள்ளார்.
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் களைக்கட்டி வருகிறது.
புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் கிருஷ்ணா ஷெராப் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணிக்குத் திருமணம் நடைபெறுகிறது.
திருமணம்
திருமணத்தில் தென்னிந்திய முறைப்படி வாழை இலையில் சாப்பாடு வழங்கப்படும் என்று சுனில் ஷெட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கண்டாலாவில் திருமணம் நடப்பதால் மும்பையிலும் திருமண பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாலிவுட் மற்றும் விளையாட்டுத்துறையில் இருக்கும் 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.