பிரபல நடிகையை கரம்பிடிக்கும் கே.எல்.ராகுல் - திருமணம் எப்போ தெரியுமா!

KL Rahul Bollywood Marriage
By Sumathi Nov 23, 2022 07:50 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காதலிக்கும் நிலையில் அவர் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

காதல் 

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியாவும், பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு அவர்களது பெற்றோரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

பிரபல நடிகையை கரம்பிடிக்கும் கே.எல்.ராகுல் - திருமணம் எப்போ தெரியுமா! | Athiya Shetty Kl Rahul To Get Married In 2023

இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அதியாவின் தம்பி அஹானின் முதல் படமான தடாப் ப்ரீமியரில் தான் அவர்கள் தங்களின் காதலை உறுதி செய்தார்கள். தொடர்ந்து, ராகும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள வெளிநாடு செல்லும்போது அதியாவும் உடன் செல்கிறார்.

திருமணம்

அண்மையில், அறுவை சிகிச்சைக்காக ராகுல் ஜெர்மனி சென்றபோது அவருக்கு துணையாக இவரும் சென்றார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் துவக்கமான ஜனவரியில் இவர்களது திருமணம் நடக்கவிருப்பதாகவும்,

பிரபல நடிகையை கரம்பிடிக்கும் கே.எல்.ராகுல் - திருமணம் எப்போ தெரியுமா! | Athiya Shetty Kl Rahul To Get Married In 2023

மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.