பாதியில் கழட்டிவிட்டப்பட்ட கே.எல்.ராகுல்? 3-வது போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் - குழப்பும் கம்பீர்

KL Rahul Indian Cricket Team Board of Control for Cricket in India Gautam Gambhir
By Karthick Aug 07, 2024 09:52 AM GMT
Report

இன்று களமிறங்கிய 3-வது ஒரு நாள் போட்டிக்கான அணியில் கே.எல்.ராகுலுக்கு இடமளிக்கப்படவில்லை.

இந்தியா பந்துவீச்சு

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் சமன், 2-வது போட்டியில் தோல்வியடைந்த இந்தியா கடைசி போட்டியில் வெற்றியை குறிவைத்துள்ளது. டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

India vs Srilanka 3rd ODI

12 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 51 ரன்களை அந்த அணி விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, மிடில் ஆர்டரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நட்சத்திர ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் கழட்டி விடப்பட்டுள்ளார்.

கைகொடுக்காத திட்டம்...முரண்டுப்பிடிக்கும் ரோகித் - பின்வாங்குவாரா கம்பீர்? அணிக்குள் சலசலப்பு

கைகொடுக்காத திட்டம்...முரண்டுப்பிடிக்கும் ரோகித் - பின்வாங்குவாரா கம்பீர்? அணிக்குள் சலசலப்பு


அவருக்கு பதிலாக அணியில் ரியான் பராக் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரே ஒரு மாற்றம் தான் இது என்றாலும், இது தொடர்பாக பல கருத்துக்கள் சமூகவலைத்தளத்தில் தலைதூக்கிவ் விட்டன.

காரணம் இதுவா?

முக்கியமான 2-வது போட்டியில் கே.எல்.ராகுல் 0(2), முதல் ஒரு நாள் போட்டியில் 31(43) எடுத்து வெளியேறினார். 2-வது போட்டியில் அவர் சொதப்பியதே காரணம் என பலரும் விமர்சித்தாலும், வெற்றி பெற்றாகவே வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணிக்கு பந்துவீச்சிலும் ரியான் பராக் கைகொடுப்பார் என நம்பிக்கை பயிற்சியாளர் கம்பீர் வைத்துள்ளாராம்.

KL Rahul

ரியான் பராக் முன்னர் டி20 போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிக்காட்டி இருந்தார். இதனை காரணமாகவே கொண்டு, கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரியான் பராக் இணைப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என குறிப்பிடத்தக்கது.

Rohit sharma Gautam Gambhir

அதே நேரத்தில், மிடில் ஆர்டரில் வந்த கே.எல்.ராகுல் 2 போட்டிகளிலும் பின் வரிசையில் களமிறங்கினார். இது குழப்பமான ஒன்றாகவே இருப்பதாகவும் ரசிகர்கள் அதற்கு காரணம் கம்பீர் தான் என்றும் விமர்சிக்கிறார்கள். w