கைகொடுக்காத திட்டம்...முரண்டுப்பிடிக்கும் ரோகித் - பின்வாங்குவாரா கம்பீர்? அணிக்குள் சலசலப்பு
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுள்ள கம்பீர் சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ குறிவைத்துள்ளார்.
கம்பீர் திட்டம்
அவர் அதன் காரணமாகவே இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவேண்டும் என பேசினார். தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் என பல முன்னணி வீரர்கள் களமிறங்கியுள்ளார்கள்.
ஆனால், நேற்று இந்த அணியால் 230 ரன்களை குவிக்க முடியவில்லை. ஆட்டம் சமனில் முடிந்து போனது. இதற்கு பல தரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும், சில சமூகவலைத்தள கருத்துக்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. என்னனெவன்றால், அணியில் பௌலிங் மாற்றம் பல நடப்பதாகவே தெரிகிறது.
முரண் கருத்துக்கள்
இது டி20 போட்டியிலேயே நாம் காண முடிந்தது. சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரை வீசினார். அதே போல தான் நேற்றும் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் இறுதி கட்டத்தை எட்டும் போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக சுப்மன் கில் பந்துவீசினார். அதே போல கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருந்த போதிலும் 4-வது விக்கெட்டிற்கு களமிறக்கப்பட்டார் வாஷிங்டன் சுந்தர்.
இதுவும் சற்று முரணான விஷயமாக பார்க்கப்பட்டது. இது போன்ற ஒரு முயற்சியை ரோகித் தலைமையில் பெரிதாக காணவில்லை. அவர், பந்துவீச்சாளர்களை திடீரென மாற்றினாலும், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இறுதியில் வாய்ப்பு பெரிதாக பெற்றதில்லை.
கொல்கத்தா அணியில் நரினை ஓப்பனராக களமிறக்கி வெற்றி கண்ட கம்பீர் அதே போன்ற ஒரு முன்னெடுப்பை இந்திய அணியிலும் மேற்கொள்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், அது நேற்று கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இது போன்ற முயற்சிகள் தொடரும் பட்சத்தில், கேப்டனான ரோகித் சர்மா பயிற்சியாளர் கம்பீருடன் முரணான நிலைக்கும் வரலாம் என்றும் அது அணிக்கு நல்லதல்ல என்றே பலர் கருதுகிறார்கள்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
