கட்டியணைக்க ரூ.11, முத்தத்திற்கு ரூ.115 ..இளம்பெணின் வினோதமான பிஸ்னஸ் - புது ட்ரெண்ட்!
இளம் பெண் ஒருவர் அன்பை விலை போட்டு விற்றுக்கொண்டிருப்பது படு வைரலாகியுள்ளது.
புது ட்ரெண்ட்
சீனாவில் தற்போது சமூக வலைதளங்களில், ஏராளமான புது புது விஷயங்களை நாம் அன்றாட பார்த்து கடந்து வருகிறோம். அதில் சில ஆச்சரியத்தையும், ஒரு சில அதிர்ச்சியையும் கொடுக்கிறது.
அந்தவகையில், ‘hug’ or ‘slap’ என்றெல்லாம் பலர் தங்களின் கைகளில் பலகைகளை வைத்துக் கொண்டு தெருக்களின் ஓரங்களில் நிற்பதை காண்டிருப்போம்.இதுபோன்ற சம்பவம் வெளிநாடுகளில்தான் பெரும்பாலும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் அண்மைக்காலமாக இளம்பெண் ஒருவரது செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சீனாவின் நகர வீதி ஒன்றில்,
வினோத பிஸ்னஸ்
ஸ்டால் ஒன்றை அமைத்து அதில் ஒரு அட்டையில் காதலையும் மற்றொரு அட்டையில் தோழமையையும் விலை போட்டு விற்று வருகிறார் அந்த பெண். அந்த பலகையில், கட்டியணைப்பதற்கு 11 ரூபாயும், ஒரு முத்ததிற்கு 115 ரூபாயும், ஒன்றாக படம் பார்க்க வேண்டுமானால் 150 ருபாயும்,
வீட்டு வேலைகளை செய்துதர 200 ரூபாயும், ஒன்றாக மது அருந்த 4100 ரூபாயும் கட்டணம் என்று எழுதப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஷென்சென் போன்ற இடங்களில் பல பெண்கள் இத்தகைய ஸ்டால்களை அமைத்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில், நெட்டிசன்கள் தங்களின் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் குறிப்பாக “மனித உணர்ச்சிகளை இப்படி வியாபாரம் செய்தால், அது உறவுகள் மீதான நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்” என்று பலர் அவர்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.