சுந்தர்.சி'யால் நான் செஞ்ச பெரிய தப்பு - மீளாமல் வருந்தி வரும் கிரண்
தற்போது இணையதளங்களின் மூலம் ரசிகர்களிடம் தொடர்ந்து உரையாடி வருகின்றனர் கிரண்.
நடிகை கிரண்
வடஇந்திய நடிகைகளில் அறிமுகமான சில படங்களிலேயே தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக மாறியவர் நடிகை கிரண் ரத்தோட். விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அடுத்தடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமாகினர்.
ஆனால், வளர்ந்த வேகத்திலேயே சட்டென படங்களில் இருந்து கனமழை போகினார் கிரண். இதற்கு தற்போது வரை காரணம் கிடைக்கவில்லை.
ஆம்பள படம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தனியார் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் கிரண், சுந்தர்.சி இயக்கிய படத்தில் நடித்தது தான் செய்த பெரிய தவறு என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கிய "ஆம்பள" படத்தில் நடித்ததை குறித்து பகிர்ந்து கொண்ட கிரண், படத்தில் நடிக்காமல் நீண்ட நாட்கள் இருந்த நிலையில் சுந்தர்.சியிடம் பட வாய்ப்பு கேட்ட நிலையில், படத்தில் நான் செட் ப்ராப்பர்டி போல தான் இருந்தேன். அதில் நடித்தது நான் செய்த தவறு தான்" என கூறி இருக்கிறார்.