புனித நுாலான பைபிளுக்கு திடீர் தடை - வலுக்கும் கண்டனம்..காரணம் என்ன?

United States of America
By Thahir Jun 05, 2023 07:40 AM GMT
Report

அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பைபிளுக்கு தடை 

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் பைபிள் தடை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுதுவம் ஹிந்துகளின் புனித நுாலான பகவத் கீதை, முஸ்லீம்களின் புனித நுாலாக குர் ஆன்னும், கிறிஸ்தவர்களின் புனித நுாலாக பைபிளும் இருந்து வருகிறது.

King James Bible is Banned in America

இந்த நிலையில் பைபிளில் அநாகரீகம் மற்றும் வன்முறையை துாண்டும் வகையிலான தலைப்புகள் இருப்பதாகவும், கிங் ஜேம்ஸ் பைபிளில் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற தலைப்புகள் இருப்பதாகவும் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவில் நடுநிலைப்பள்ளிகளில் பைபிளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.