1000 வருடமாக முடிசூட்டு விழா நடக்கும் இடம் இதுதான் - கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாதாம்..?

England King Charles III
By Sumathi May 06, 2023 04:18 AM GMT
Report

இன்று இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் முடி சூடப்போகிறார்.

மூன்றாம் சார்லஸ்

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி உயிரிழந்தார். அதற்கு பின் மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இவரது முடி சூடும் விழா இன்று லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறவுள்ளது.

1000 வருடமாக முடிசூட்டு விழா நடக்கும் இடம் இதுதான் - கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாதாம்..? | King Charles Coronation Ancient Treasures Britain

அவரை அழைத்துச் செல்ல 700 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசன சாரட் வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது.

முடிசூட்டு விழா

உலகமே எதிர்பாக்கும் இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

1000 வருடமாக முடிசூட்டு விழா நடக்கும் இடம் இதுதான் - கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாதாம்..? | King Charles Coronation Ancient Treasures Britain

இந்த நிகழ்வில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாது என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அதற்குக் காரணம், இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்னும் சர்ச்சை அரசி எலிசபெத் முடிசூட்டிய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

அதற்குப் பதிலாக, அரசரின் மனைவி கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிரீடம் லண்டன் டவரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு முடிசூட்டு விழாவுக்காக அளவு மாற்றப்படுகிறது.