மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: மேகன் பங்கேற்கவில்லை - இளவரசர் ஹாரிக்கு 10வது வரிசையில் இடம்!
முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை என பக்கிங்ஹாம் தகவல் தெரிவித்துள்ளது.
முடிசூட்டு விழா
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், மறைவையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (73) மன்னராக அறிவிக்கப்பட்டார். அதற்கான முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில் நடக்கிறது.

அதில், அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
இந்த விழா 3 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விழாவில் இளவரசர் ஹாரி மட்டும் பங்கேற்பார் எனவும், மேகன் பங்கேற்க மாட்டார் எனவும் அரண்மனை தெரிவித்துள்ளது.

தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி, தனது மனைவி மேகன், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan