ஒரு வேளை சாப்பாட்டுக்கு 46ஆயிரம் பில்லா? ஷாக்காகி பகிர்ந்த பிரபல மாடல்!

Gossip Today Instagram Viral Photos
By Sumathi Jul 23, 2022 07:31 AM GMT
Report

ஹாலிவுட் மாடலான கிம் கர்தாஷி 46 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட தன்னுடைய பில்லை சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

கிம் கர்தாஷி

இன்ஸ்டாகிராமில் தனக்கென சுமார் 30 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் கிம் கர்தாஷி. உலக அளவில் பிரபல சூப்பர் மாடலாக இருந்து வரும் இவர், அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு 46ஆயிரம் பில்லா? ஷாக்காகி பகிர்ந்த பிரபல மாடல்! | Kim Kardashian Hotel Bill Viral In Internet

அழகு சாதன நிறுவனம் ஒன்றையும், உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வரும் தொழிலதிபராகவும் உள்ளார். டமோன் தாமஸ், க்ரிஸ் ஹம்ஃபிரீஸ் மற்றும் கன்யே வெஸ்ட் ஆகிய மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர்,

ஹோட்டல் பில்

தன்னுடைய 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் நான்காவதாக ராப் பாடகர் ஒருவருடன் டேட் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அதையும் உறுதி செய்துள்ளார். மாடலிங் துறையில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள்.

டயட் கடைபிடிப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால் கிம் கர்தாஷி, தன்னுடைய நண்பரை பார்க்க அமெரிக்கா சென்ற போது, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அங்கு பல வகை சாப்பாடுகளை காலை உணவாக உட்கொண்டுள்ளார்.

 வைரல்

இதற்கு 576$ அமெரிக்க டாலர் பில் தொகையாக வந்துள்ளது. இந்திய மதிப்பின் படி 46000 ரூபாய் ஆகும். இவருக்கு கொடுக்கப்பட்ட பில் தொகையை பார்த்து இவரே அதிர்ச்சி அடைந்து, சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.