கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை; ஷாக் கொடுத்த வடகொரியா - நடுங்கும் உலக நாடுகள்!
புதிய அணு ஆயுதத்தை வடகொரியா உருவாக்கியிருக்கிறது.
புதிய அணு ஆயுதம்
புதிய ஏவுகணையை வடகொரியா காட்சிப்படுத்தியிருக்கிறது. இதற்கு 'ஹ்வாசாங்-20' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஆயுதத்தை, அந்நாட்டு அரசு வெளியில் காட்சிப்படுத்தியிருக்கிறது.
இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பாகும். சாதாரண எரிபொருட்களை அல்லாமல், அணு ஆயுதங்களை இந்த ஏவுகணை சுமந்து செல்லும். அதிகபட்சமாக 15,000 கி.மீ வரை இந்த ஏவுகணை சென்று தாக்கும்.
வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரத்திலிருந்த இந்த ஏவுகணையை ஏவினால் அது வடஅமெரிக்காவில் உள்ள நியூயார்க், வாஷிங்டன், மியாமி, சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களை முழுமையாக தாக்கி அழித்துவிடும்.
அலறும் நாடுகள்
அதேபோல கனடாவின் டொராண்டோ, மாண்ட்ரீல், தென்அமெரிக்காவின் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ், பிரேசிலின் சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ, ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை பொறுத்தவரை லண்டன்,
பாரிஸ், பெர்லின் ஆகியவற்றையும் ஆப்பிரிக்காவின் கேப் டவுன், லாகோஸ் நகரங்களையும், ஆஸ்திரேலியா சிட்னி, மெல்போர்ன் நகரங்களையும் இந்த ஆயுதம் தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஆயுதம் 0.5 கி.மீ சுற்றளவில் தாக்கினால் எல்லா கட்டிடங்களும் வெப்பத்தால் ஆவியாகிவிடும்.
மனிதர்கள் இருந்ததற்கான அடையாளமே இருக்காது. கடுமையான தீ விபத்து ஏற்படும். இந்த சுற்றளவில் இருப்பவர்களும் மரணித்துவிடுவார்கள்.