வடகொரியா அதிபருக்கு இப்படிப்பட்ட நோயா? - தேசிய புலனாய்வு வெளியிட்ட தகவல்!
தேசிய புலனாய்வு சேவை தற்பொழுது வடகொரியா அதிபர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
தென்கொரியா உறுப்பினர்
தென்கொரியாவின் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவின் நிர்வாக செயலாளராக உள்ளார் யோ சாங் பும்.

இவர் தற்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பற்றி சில முக்கியத் தகவல்களைச் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அதில் அவர், வடகொரியா சமீபத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகளையும், பாரம்பர்ய மது வகைகளையும் இறக்குமதி செய்வதாக தகவல் வெளியாகியது.
மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய படங்களின் செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வின்படி, அவரது எடை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வடகொரிய அதிபர் எடை 140 கிலோவுக்கு மேல் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
நோய் பாதிப்பு
இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் பிரபல செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான புளூம்பெர்க், தேசிய புலனாய்வு சேவை வெளியிட்ட தகவலை காட்டியுள்ளது.

அதில், "வடகொரிய அதிபர் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நிக்கோடின், ஆல்கஹால் ஆகிய தூக்கமின்மை போன்ற சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இறக்குமதி செய்திருக்கும் விவரங்களும் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மே 16 அன்று, மக்கள் மத்தியில் கிம் ஜாங் உன் தோன்றியபோது அவர் கண்களைச் சுற்றி தெளிவான கருவளைய வட்டங்கள் இருந்தன.
மிகவும் சோர்வாகத் தோன்றினார். தூக்கமின்மை சிகிச்சைக்காக சோல்பிடெம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.