‘’அடுத்த 11 நாள் யாரும் சிரிக்க கூடாது , மீறினால் மரணம் தான் ‘’ - வடகொரியா அதிபர் உத்தரவு
வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட கொரியா ஒரு விநோதமான நாடு. அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை அதன் சர்வாதிகாரி கின் ஜாங் உன் (Kim Jong Un) தான் நிர்ணயிக்கிறார். வட கொரியாவில் ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்ற கதை தான்.
வட கொரியா நாட்டில் புதிதாக கொண்டு வரப்படும் புதிய உத்தரவுகள் மக்களை பெரிதும் பாதிக்கின்றது . அதற்கு உதாரணமாக , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது
இந்த நிலையில் வட கொரிய அதிபர் கின் ஜாங் உன் திடீரென ஒரு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி வட கொரிய நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என்ற புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதற்கு காரணம் ,வட கொரியாவின் முன்னாள் அதிபர் கின் ஜாங் உன் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்
இந்த புதிய உத்தரவை பொதுமக்கள் அனைவரும் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்றும் மது அருந்துவது, பிறந்தநாள் கொண்டாடுவது உள்ளிட்ட எந்த கொண்டாட்டமும் நாடு முழுவதும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ,பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.