வெள்ளத்தால் கடும் சேதம் - தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை
வள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா
கடந்த ஜூலை மாதம் வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,000 வீடுகள், நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் பாதிப்புகளில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வட கொரியா அதிபர் கிம் ஜாங் இந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என தெரிவித்தார்.
மரண தண்டனை
மீட்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை பாராட்டியதோடு அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
[]
இந்நிலையில், அதிபரின் உத்தரவுப்படி, ஊழல் மற்றும் கடமை தவறியதற்காக மாகாண ஆளுநர்கள் உட்பட 30 பேருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தென் கொரியாவின் Chosun TV செய்தி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது வரை வடகொரியா தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.