மேடையில் கதறி அழுத அதிபர் - பெண்களிடம் முக்கிய கோரிக்கை வேறு.!

Viral Video North Korea Kim Jong Un
By Sumathi Dec 06, 2023 08:55 AM GMT
Report

பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அதிபர் கிம்ஜாங் உன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிம்ஜாங் உன்

வடகொரியா நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். நாட்டின் சர்வாதிகாரி போல் ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி தான் என கூறப்படுகிறது.

kim-jong-un

தற்போது அங்கு குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில், பேசிய அவர் நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்.

59 கி.மீ தாண்டாத குண்டு தொலைக்காத ரயில் - கிம் ஜாங் உன்'னின் அச்சமா..?

59 கி.மீ தாண்டாத குண்டு தொலைக்காத ரயில் - கிம் ஜாங் உன்'னின் அச்சமா..?

கோரிக்கை

அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என மேடையில் அழுத படி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் அறிக்கையின் படி, 2023-ம் ஆண்டு வரை, வட கொரியாவின் கருவுறுதல் விகிதம் 1.8 எனக் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள், மருத்துவ உதவிகள், கல்வி மற்றும் உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.