இந்த மனிதருக்கும் அன்பு இருக்கு சார் : வட கொரிய செய்தியாளருக்கு கிம் ஜாங் உன் வழங்கிய சூப்பர் பரிசு
மிகவும் கண்டிப்பான அதிபர் , ஏவுகணைகளை ஏவி உலகநாடுகளிடம் வெறுப்பை சம்பாதித்தவர் ,தனது நாடு பொருளாதாரத்தால் கடுமையாக பாதிக்கபட்டபோதும் ஏவுகணை சோதனையினை விடாது நடத்தியவர்.
நாட்டில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சிறு தவறு செய்தால் இவர் கொடுக்கும் பரிசு மரணம்... ஆம் இப்போதே நீங்கள் கணித்திருக்கலாம் அவர்தான் வடகொரிய அதிபர் கிம்ஜாங்.
பொதுவாக வடகொரிய அதிபரின் செயல்கள் எல்லாம் உலக அளவில் கவனம் பெற்றவை என்றே கூறலாம். அணு ஆயுத சோதனை நடத்தும்போதும் சரி, உலக நாடுகளையே ‘’ஆடி பாரு மங்கத்தா ‘’ என மிரட்டும் அமெரிக்காவிற்கே எச்சரிக்கை விட்டது வரை தன்னை ஒரு சர்வாதிகாரியாகவே உலகுக்கு அறிய வைத்துள்ளார் கிம்ஜாங்.
கிம்ஜாங் மனதில் கருணை,இரக்கம், அன்பு இதெல்லாம் கிடையாது என நாம் நினைக்கும் போது வட கொரிய செய்தி தொகுப்பாளருக்கு ஆடம்பர வீடு ஒன்றை பரிசளித்துள்ளார் கறார் அதிபர் கிம்ஜாங்.
79 வயதான அரசு ஊடக தொகுப்பாளரான ரி சுன் ஹி என்ற பெண் தொகுப்பாளர் வடகொரியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்து செய்தி வாசிப்பதில் பிரபலமானவர், இவருக்கு வடகொரியாவில் பிங் லேடி என்ற பெயரும் உண்டு.
சிறு வயது முதலே கட்சியின் சிறப்பான அறிவிப்பாளராக பணியாற்றிய ரி சுன் ஹி க்கு மரியாதை செலுத்தும் வகையில் வட கொரிய பியாங்யாங்கில் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பினை பரிசாக வழங்கியுள்ளார்.
ரி சுன் ஹி குறித்து கிம்ஜாங் கூறுகையில் ‘’ சிறு வயது முதலே அதாவது 50 ஆண்டுகளாக நாட்டின் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் நாட்டின் அறிய பரிசுகளில் இவரும் ஒருவர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் 50 வருடமாக சேவையாற்றிய செய்தி வாசிப்பாளருக்கு கிம்ஜாங் அடுக்கு மாடி குடியிருப்பினை பரிசாக வழங்கியுள்ளது இந்த கல மனசுலையும் கொஞ்சம் இரக்கம் இருக்கு என கூறுகின்றனர் இணையவாசிகள்